காணாமல் போன மீனவர்களது வீட்டுக்கு விஜயம் செய்த ஸ்ரீதரன்…!

திருகோணமலையில் உள்ள சல்லி பகுதியில் உள்ள கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர் குறித்த வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று (31) விஜயம் செய்தார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 20 ஆம் திகதி சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில்  கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த   குட்டிராசா சசிக்குமார் வயது (45) ,முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *