குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுராகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாத்தளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 82 வயதுடைய மூதாட்டியொருவர் காயமடைந்தவர் ரிதிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் சடலம் ரிதிகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.