யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியதால் பதட்ட நிலை ஏற்பட்டது.
சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே மேற்படி நபரால் எரியூட்டப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ் குருநகர் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.