அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
78, 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.