திருப்பி அனுப்பபட்ட கட்டுநாயக்க வந்த இரு விமானங்கள்..!

 

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், UL 309 மற்றும் அபுதாபியில் இருந்து EY 394 என்ற Etihad Airways விமானம், 

கட்டுநாயக்கவைச் சுற்றியுள்ள பாதகமான வானிலையினால் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிங்கப்பூரில் இருந்து வந்த UL 309 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக, கொழும்பில் இருந்து மத்தளைக்கு புதிய பணியாளர்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அனுப்பியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *