நாட்டில் 10 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை ஒன்றினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவிற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சீதாவக்க பகுதிக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புலத்சிங்ஹல, மத்துகம மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகல மற்றும் வரகாபொல ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, அயகம, பெல்மதுல்லை, குருவிட்ட, எலபாத்த, நிவித்திகல, கலவானை, கிரியெல்ல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.