இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து சட்டப்பூர்வ கொவிட் கட்டுப்பாடுகளும் நீக்கம்!

இங்கிலாந்தில் முதல் கொவிட் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீதமுள்ள அனைத்து சட்டப்பூர்வ கொவிட் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.

இதன்படி, கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தால், மக்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சில விமர்சகர்கள், இந்தத் திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றத் தவறியதாகக் கூறுகிறார்கள்.

வடக்கு அயர்லாந்தில் ஏற்கனவே அனைத்து சட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன.

முதல் கொவிட் விதிமுறைகள் மார்ச் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் அவை வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகள், பயணத் தடைகள், பாடசாலைகள், கடைகள் மற்றும் உணவகங்களை மூடுவது வரை உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *