நீர் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்

  

சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாதுக்கை, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, மஹரகம, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, பொரலஸ்கமுவ, பெபிலியான, கலகெதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு படையினர் மற்றும் ஏனைய தரப்பினரின் உதவியுடன் உடைந்த பிரதான நீர் குழாயை மீளமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நேரத்தில் தேவையில்லாமல் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டாம் என்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் சபை மக்களை கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *