இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமைடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 17 வீடுகள் முழுமையாகவும், 31.381 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் இதுவரை 41,610 குடும்பங்களை சேர்ந்த 161,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு, சுழல்காற்று, மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.
அதன்படி சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
7,611 குடும்பங்களை சேர்ந்த 28552 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 03 வீடுகள் முழுமையாகவும், 890 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கேகாலை மாவட்டத்தில் 7 பேர் காயமடைந்ததுடன், 648 குடும்பங்களை சேர்ந்த 2885 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 638 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் கிளிநொச்சியில் 432 குடும்பங்களை சேர்ந்த 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மேல் மாகாணம், களுத்துறை மாவட்டத்தில் இருவர் காயமடைந்ததுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
2896 குடும்பங்களை சேர்ந்த 10953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 182 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கம்பகா மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 14734 குடும்பங்களை சேர்ந்த 61188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 241 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4108 குடும்பங்களை சேர்ந்த 15942 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 329 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தென் மாகாணம் காலி மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 3124 குடும்பங்களை சேர்ந்த 10643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
04 வீடுகள் முழுமையாகவும் 139 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
7685 குடும்பங்களை சேர்ந்த 28826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 வீடுகள் வீடுகள் முழுமையாகவும் 478 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு முழுமையாகவும் 156 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் 66 குடும்பங்களை சேர்ந்த 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 51 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 57 வீடு முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மத்திய மாகாணம்m கண்டி மாவட்டத்தில் 36 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 02 பேர் காயமடைந்துள்ளனர். 212 குடும்பங்களை சேர்ந்த 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
210 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.