மட்டு.சுகாதார பிரிவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மட்டு.சுகாதார பிரிவில் 45000திற்கும் அதிகமானோர் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர் சுகாதார வைத்தியதிகாரி உதகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியகாரி பிரிவில் இதுவரை 45000த்திற்கும் அதிகமானோர் மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

நேற்று (புதன்கிழமை) காலை மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு சின்னஉப்போடை அல்டோ கலாசார மண்டபத்தில் சுகாதார லைத்தியதிகாரி தலைமையில் ஆரம்பமானது.

பெருமளவிலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இத்தடுப்பூசி முகாமில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *