
யாழ்ப்பாணம், பெப் 24: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் நிர்மலதாஸ், இரத்தினசிங்கம் கமலகரன் ஆகிய இரு அரசியல் கைதிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறைக் கைதிகளின் உறவினர்களை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று மாலை 4 மணிக்கு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.