யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வு …!

தியாகி பொன். சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல், இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்ட சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று(05) காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன, அதன் செயலாளா தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி  மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

“உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி சிறை மீண்ட இளைஞர் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் அந்தச் சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு  உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில், அதனைத் தமிழ் மக்கள் மீள எடுத்து சிவகுமாரனின் திருவுருவச் சிலை அமைத்த வளாகத்தில் மீள பிரதிதிஷ்டை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *