இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) இன்று வியாழக்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கும் சென்று மாவட்டச் செயலாளர் அ.உமா மகேஸ்வரனுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள், மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இக்கலந்துரையாலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் வா.கிருபாசுதன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜனிக்காந் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவித்தித் திட்டத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.