
கண்டி, இலங்கையின் கலை கலாசார பண்பாட்டு அம்சங்களின் தாயகம். அந்த கண்டி நகரத்தின் மையத்திலிருந்து டி எஸ் சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து பழைய மாத்தளை வீதியை அடைந்தபோது கண்டிய நடனக்கலை பாடல்கள் காதைத் தொட்டது. பாடல்கள் வந்த திசைநோக்கி கால்கள் நடந்தன. சிலநொடிகளிலே நிமிர்ந்துபார்க்கவும் இஸ்லாமிய கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த புராதன வீடு மிடுக்குடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.