யாழ் மாவட்ட குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தினம் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் குடும்ப நல உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற 42 குடும்ப நல உத்தியோகத்தர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரனவும், சிறப்பு விருந்தினராக அரச குடும்ப நல உத்தியோகத்தர்கள் சங்க தலைவி திருமதி தேவிகா கொடித்துவக்கு, கௌரவ விருந்தினர்களாக பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரேமன்ஸ் ,தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் இந்துஜன், மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர் வைத்தியர் கஜேந்திரன், குடும்பநல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.