வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்..!

ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச  வடக்கு மாகாணத்திற்கான  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது இன்று (09) கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையை (Smart Classroom) திறந்து வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு சஜித் விஜயம் செய்யவுள்ளார். 

நாளையதினம் (10) பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், 

கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்கவுள்ளார்.

எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் ஊர்காவற்துறை தொகுதி, கோப்பாய் தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

மேலும், 13ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *