கண் நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் ‘பிரெட்னிசோலோன்’ கண் திரவத்தின் 21510 குப்பிகள் தரம் குறைந்ததாக காணப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கண் திரவத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தேசிய கண் வைத்தியசாலையின் இரு நோயாளிகள் முழுமையாக பார்வையற்றவர்களாகவும்,
நுவரெலியா பொது வைத்தியசாலையின் சுமார் பதினைந்து நோயாளிகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்த பாரதூரமான எதிர்விளைவுகள் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும், அங்கவீனமுற்ற நோயாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
எனவே தற்போதைய சுகாதார அமைச்சரும், செயலாளரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.