பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.
இந் நிலையில், இன்றைய தினம் பொலிசார் தமது வாகனத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றுளடளனர்.
குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர்,
பெற்றோர் ஒருவர் பேருந்துக்கு குறுக்காக மோட்டர் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.