ஆசிரியர் – அதிபர்கள் நாளை போராட்டம்

நாளை (12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டு பணி நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 101 சாதாரண தர மீள் மதிப்பீட்டு நிலையங்களுக்கு முன்பாகவும், 100 வலய அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் – அதிபர் சம்பள கொடுப்பனவை நீக்கியமை மற்றும் பெற்றோர்களின் கல்விச் சுமையை உடனடியாக நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *