
குடும்ப வன்முறை காரணமாக தந்தையால் 7 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர பகுதியான Villemomble பகுதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலையில் சுடப்பட்டு சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவதினத்தன்று சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.
இதையடுத்து விசாரணைகளை தொடர்ந்த அதிகாரிகள், வீட்டின் மற்றுமொரு அறையில் சிறுவனின் தந்தை தற்கொலைக்கு முயன்ற நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் 36 வயதுடைய சிறுவனின் தந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தந்தையே மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவனின் தந்தை இம்மாத ஆரம்பத்திலேயே சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தார்.
மனைவியுடனான குடும்ப தகராரின் முடிவிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக அயலவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




