சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மர நடுகை வேலைத்திட்டமும், சிரமதானப் பணியும் இன்று (11) ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
சிட்டி போய்ஸ் சமூக அமைப்பு மற்றும் அப்பிரதேசத்தின் மகளிர் அமைப்பு என்பனவற்றின் உதவியுடனும், ரத்மல்யாயா கிராம உத்தியோகத்தர் அபுதாஹிர் தௌபீகா தலைமையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, சமூக ஆர்வலரும், புத்தளம் மத்தியஸ்த சபை அதிகாரியுமான முஜாஹித் நிஸார் முதல் மரக்கன்றை நாட்டி வைத்தார்.
இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பார்த்தீபன், சமுர்த்தி அபிவிருத்தி பாத்திமா ரினூஸா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சிரமதானமும் இடம்பெற்றதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்திருப்பது, கிராமத்தை அழகுபடுத்துவது, டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.