கரவெட்டி பிரதேசத்திற்குட்பட்ட நெல்லியடி மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம்(11) பாடசாலை அதிபர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் புருஷோத்தமன் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி இருந்தனர்.
இதேவேளை, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு கருத்துக்களை கொண்ட நகைச்சுவை வடிவிலான கருத்துப் பகிர்வை இரண்டு மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.