09 வயது மகளை கொடூரமாக தாக்கிய மாற்றாந் தந்தை – இலங்கையில் தொடரும் பயங்கரம்

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர், சிறுமியின் மாற்றாந் தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, அதனை மறைத்தமையால் சிறுமி மீது  இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மையில் முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் 04 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய குகுல் சமிந்த என்பவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதேபோன்ற மற்றொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *