முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு (Chandrika Kumaratunga) சொந்தமான ஹொரகொல்ல வளவே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் காணி காவலாளிகள் இருவரை துப்பாக்கிகளுடன் நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வட்டுபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.