
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த அரசு,அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
தோட்ட மக்களுக்காக கோதுமை மாவில் 40 ரூபா விலைக்கழிவு வழங்கியுள்ளீர்கள் என கூறினீர்கள் அது சந்தோசம்.உங்களை நாம் குறை கூறவில்லை.நிவாரணம் கொடுப்பதற்கு முன்னரே மக்களின் பணத்தை அறவிடும் அரசாங்கம் இது ஒன்று தான்.
முற்பணம் கொடுத்து நிவாரணம் பெறும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நாவலப்பிட்டிய கேகாலை பகுதியில் உள்ள தோட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளத்தில் ,ஜனவரி மாதம் கோதுமை மாவுக்கு என ஆயிரத்து 200 ரூபா சம்பளம் வெட்டப்பட்டுள்ளது.
ஆனால் இன்று வரை நிவாரணம் கிடைவில்லை.மக்களின் பணத்தை வெட்டி மக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அரசாங்கம் இது. டொலர் இல்லாத நிலையில் இந்த அரசு தலைகீழாக நிற்கிறது. மக்களின் வாக்குகளை பெற்று சபையில் வாய் மூடிக்கொண்டு இருக்கும் பலர் அரசின் சலுகைகளுக்காக இவ்வாறு செய்கின்றனர் என்றார்.