மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் சர்ச்சை கருத்து வெளியாகியுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்தோடு 1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.





