
நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாhளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.
கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றதாகவும், இன்று அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சத்துணவு முறையின் கீழ் எரிபொருளை வழங்க ஆரம்பித்துள்ளன.
போக்குவரத்தை வழங்குவதில் உள்ள சிரமங்கள் காரணமாக தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில் எரிபொருள் நெருக்கடியால் மின்பிறப்பாக்கிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாளாந்த தேவைக்கு ஏற்ற வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளை விநியோகிக்க முடியாமையே மின் நெருக்கடிக்கு பிரதான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.