இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி

வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் 30% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய வறட்சியினால் வெண்ணிற ஈக்களின் பரவல் அதிகரித்துள்ளது.

வெண்ணிற ஈ, மஞ்சள் நிறத்தினால் அதிகம் ஈர்க்கப்படுவதால், இளநீர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *