தோல்வியடைந்துவிட்டோம் – ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஏஞ்சலோ மெத்யூஸ்…!

20க்கு இருபது உலகக்கிண்ணத்தில் உலகக்கிண்ணத்தில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் கிரிக்கெட் அணியின் தலைவர்  ஏஞ்சலோ மேத்யூஸ்

குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், . 

மிகுந்த வருத்தமளிக்கிறது. ஓரணியாக எமது எதிர்பார்ப்புக்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணாகிவிட்டன. ஆகவே, நாம் மிகுந்த வருத்தமடைகிறோம். உங்களிடம் மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இங்கு வந்தமைக்கான பணியை அணி என்ற ரீதியில் உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியவில்லை. நாம் விளையாடிய 2 போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்களே பிரகாசிக்க தவறினர். துடுப்பாட்டத்தில் நாம் குறைந்த ஓட்டங்களை பெற்றிருந்தாலும் எமது பந்து வீச்சாளர்களும் களத்தடுப்பாளர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டு அந்த 2 போட்டிகளிலும் சிறந்த சவாலை விடுத்திருந்தனர். 

எனினும், துரதிஷ்ட வசமாக எம்மால் வெற்றி பெற  முடியவில்லை. இது போன்ற தொடர்களில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் முன்னோக்கி செல்வது மிகக்கடினம். ஆகவே, முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் அடுத்த சுற்று எமக்கு மிகவும் கடினமாகிப்போனது. அதே போன்று துரதிஷ்ட வசமாக நேபாளத்துக்கு எதிரான போட்டி மழை  காரணமாக தடைப்பட்டது. எனினும் ஒரு போட்டி மாத்திரமே எமக்கு எஞ்சியுள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற எதிர்பார்த்துள்ளோம். நாம் எங்கு விளையாடினாலும் எமக்கு ஆதரவு கிடைக்கும். ரசிகர்கள் இலங்கையில் விளையாடினாலும் இங்கு விளையாடினாலும் வந்து எமக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.  அவர்களை மகிழ்விக்க முடியாமல் போனதையிட்டு வருத்தமடைகின்றோம். 

மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மாத்திரமே அவர்களுக்கு எம்மால் கூற முடியும். எவரும் போட்டியில் தோல்வியடைய எதிர்பார்க்க மாட்டார்கள். தோல்வியடைய முயற்சிக்க மாட்டார்கள். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் வெற்றி பெறவே எதிர்பார்க்கின்றோம். அதனை எம்மால் இந்த தொடரில் செய்ய முடியவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *