கொரோனா மரணங்கள் வீட்டில் ஏற்பட்டால் இலவச வாகன வசதிகள்

திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் வீட்டில் மரணிப்போரின் உடல்களை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகன வசதியில்லாமல் பொது மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக நகராட்சிமன்றத்தின் கவனத்திற்கு பலதரப்பினராலும் அறியத்தரப்பட்டுள்ளது.

மேலும் இதனைக் கருத்திற்கொண்டு இன்று(30.08.2021 )ஆம் திகதி முதல் கொரோனா தொற்றினால் வீட்டில் மரணிப்போரின் உடல்களை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகன வசதிகளை நகராட்சிமன்றம் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

மேலும் மரணமானது கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டது என்பதை பொது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தும் பட்சத்தில் இச்சேவையை வழங்க முடியும்.

மேற்குறிப்பிட்ட வாகன ஏற்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்.

கலைச்செழியன் – 0771753810
கமலேஸ்வரன் – 0775384096

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *