சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின்  வருமானத்தில் 48% வளர்ச்சியை பதிவாக்கியுள்ளது

சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் (Sarvodaya Development Finance), அதன் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கைக்குப் பிறகு அதன் முதல் வருமான அறிக்கை வெளியீட்டில், 2021 டிசம்பர் 31 இல் முடிவடைந்த 2021/22 நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கு சிறந்த நிதியியல் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மொத்த இலாப வளர்ச்சியாக 48% அல்லது ரூபா 118 மில்லியன் தொகையை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

அதன் மொத்த வருமானம் 5% ஆல் அதிகரித்து ரூபா 1.3 பில்லியனாகக் காணப்பட்டது. மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலத்தின் முடிவில் மொத்த சொத்துக்கள் ரூபா 10.5 பில்லியனாக காணப்பட்டது, இதன் விளைவாக சொத்து வளர்ச்சி 17% ஆல் அதிகரித்துள்ள அதே சமயம் ஒட்டுமொத்த நிதியியல் சொத்துக்கள் 13% ஆல் வளர்ச்சியடைந்தது.

இதன் விளைவாக 2% சொத்து மீதான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. உலகளாவிய தொற்றுநோயால் எழுந்துள்ள சவால்கள் காரணமாக தொழில்துறை ஒட்டுமொத்தமாக எதிர்மறையான ஒட்டுமொத்த நிதியியல் சொத்துக்கள் வளர்ச்சியைப் பதிவுசெய்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புள்ளிவிவரங்கள் சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தால் அடையப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கைக்கு கிடைக்கப்பெற்ற ஆர்வத்துடன் சேர்த்து இந்த பெறுபேறுகள், முதலீட்டாளர்களுக்கு சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் வழங்கியுள்ள ஸ்திரத்தன்மை, வலிமை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை நிரூபிக்கிறது. சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கைக்கு அளவுக்கதிகமான விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டதுடன், 17% விண்ணப்பதாரர்கள் புதிய முதலீட்டாளர்களாக முதல் முறையாக நிறுவனத்தின் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கையில் சேருவதற்காக சந்தையில் நுழைந்தனர்.

இது சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு இடையிலான பிணைப்பையும் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கையானது கொழும்பு பங்குச்சந்தையில் அவர்களுக்கு முதலாவது சிறப்பான பலன் தரவல்ல முதலீட்டு வாய்ப்பாக மாறியது.

நிதியியல் பெறுபேறுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு சன்ன டி சில்வா அவர்கள், “3 தசாப்த காலங்கள் நீண்ட எங்களின் பயணத்தில், இலங்கையின் விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் விவசாயம் மற்றும் அது தொடர்பான வணிகங்களின் முக்கிய சீவனோபாயத்தை முன்னெடுக்க உதவினோம், இது இலங்கையில் உணவு இருப்பினை மேம்படுத்த உதவுகிறது.

பாதுகாப்பு. எங்கள் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கைக்குப் பிறகு, எங்கள் கடன் துறையை விரிவுபடுத்த நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இதனால் பல கிராமப்புற சமூகங்களுக்கு உதவுகிறோம் மற்றும் எண்ணற்ற மக்களின் வாழ்வை மேம்படுத்தி, வலுவூட்டி வருகிறோம். எங்கள் முதலீட்டாளர்களுக்கு விதிவிலக்கான மதிப்பை வழங்கும் அதே வேளையில், பொருளாதார ரீதியில் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் ஒரு உந்துசக்தியாக இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்.

2023 ஆம் ஆண்டளவில் எங்களின் சொத்துத் தளத்தை 20 பில்லியன் ரூபாயாக இரட்டிப்பாக்க ஒரு விரிவான மற்றும் தீவிரமான மூலோபாயத்தை நாங்கள் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம் என்பதை எங்கள் முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும், முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து பெறுமதியை உருவாக்கவும், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு அம்சத்திலும் வணிகத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை புத்தாக்கமான வழிமுறையில் சிந்திக்க சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் முனைப்பு காட்டும்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *