தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் அவர்கள் சிலர் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதிடன் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு தம்பானே பழங்குடித் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மஹியங்கனை மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பண்டைய கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 பேருக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது 44 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அண்மையில் கண்டியில் நிறைவடைந்த தலதா எசலபெறஹராவின் போது தேன் பூஜைக்காக தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவன் குகுவினர் சமூகமளித்திருந்தனர். அத்துடன் அவர்களுக்குதுதொடாபாக ஏற்கவே பெரஹரா கலைஞர்களுக்கு வழங்கிய தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





