கொரோனா இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு- கல்முனை

??????

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (30) பல்வேறு தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இதனடிப்படையில் குறித்த சுகாதார பிரிவு பகுதியிலுள்ள நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் ஆர்வத்துடன் மக்கள் தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர்.

இச்செயற்திட்டமானது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் பல கட்டங்களாக நடைபெற உள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்இ மேலும் இங்கு கருத்து வெளியிடும் போதுஇ இந்த இரண்டாம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழங்கப்படவுள்ளது.

இன்றைய நாளான திங்கட்கிழமை காலை 08.00 மணிமுதல் பகல் 01.00 மணிவரை எமது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறைஇ பாதுகாப்பு துறை அடங்களாக பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும் பொதுமக்கள் இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்இ சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் சட்டங்களை மதித்து நடக்குமாறும் பொதுமக்களை இதன்போது கேட்டுக்கொண்டார்.

இச்செயற்திட்டமானது கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் வழிகாட்டலுக்கமைய 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன் சினோபாம் மிகச்சிறப்பாக தொழிற்படும் தடுப்பூசியாக இலங்கையில் அறியப்பெற்றிருக்கின்றது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் கடந்த காலங்களில் பல்கலைக்கழக ஆய்வின் ஊடாக வெளிவந்த தகவல்களை அழுத்தமாக குறிப்பிடுகின்றன.

எனவே தான் கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்கும் நோக்கில் இத்தடுப்பூசி ஏற்றுக்கொள்வது அவசியமாகும்.கல்முனை பிராந்தியத்திலும் இத்திட்டத்தை 100 வீதமாக செயற்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *