சிவனொளிபாதமலை தரிசனம் மேற்கொள்ள வந்த 183 பேர் கைது…!

2023-2024 சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலத்தில், பல்வேறு போதை பொருட்களுடன் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த போதைக்கு அடிமையான 183 பேர் ஹட்டன் போதைப் பொருள் குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் தலைமையக பொலிஸ் குற்ற தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர்,

கடந்த ஆறு மாத கால சிவனொளிபாத மலைக்கு யாத்திரை காலத்தில் பல்வேறு போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு  வழிபட  வந்த183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம மற்றும் ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.  பாரூக் மற்றும் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனவும் இவர்கள் போதைப் பொருளின் பக்கம் திரும்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முடிந்த வரையில் சிறு வயதில் இருந்தே தங்களது பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாடு தெய்வ வழிபாடு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

அதேபோல் இன்றைய சிறு பராயத்தில் உள்ள, குறிப்பாக 16 வயது முதல் 28 வயது உடைய அனைவரும் வீட்டிற்க்கும் நாட்டிற்கும் நல்ல பிரஜையாக வாழ வேண்டும் என அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *