பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 289 கைதிகளுக்கு நேற்றையதினம்(21) விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் 283 ஆண் கைதிகளும், 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.