ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

 

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டு வாகனங்களுக்கும் எரியூட்டப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு தாக்குதலை மேற்கொண்டமை மிலேச்சத்தனமானதும் கண்டிக்கத்தக்கதான விடயமாகும்.

எனவே இதற்குப் பொறுப்பானவர்களும் இதனை செய்வித்தவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குறித்த விடயத்தினை செய்தவர்களும் செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *