ராஜபக்சக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு மொட்டு கட்சியின் ஆதரவினை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவினர் தேர்தல் பிரசாரப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் பொருளாதார கொலையாளிகள் என சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நபர்களுடன் இருப்பது, ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்மறையானதாக அமையக் கூடும் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தாம் ரணிலிடம் கூறிள்ளதாகத் தெரிவித்துள்ளார்.