யாழ். சாவகச்சேரியில் (Chavakachcheri) மாமரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறான நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சாவகச்சேரி – டச்சு வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சாதாரணமாக ஒரு மாவிலையானது 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே காணப்படும்
மிகப் பிரமாண்டமான மாவிலை
இந்த நிலையில், இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.
இந்த அதிசயத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
The post யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.