யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனை அவதானித்த கடை ஊழியர்கள் அப்பகுதியில் நின்றவர்கள் பெற்றோல் குண்டை வீசியவர்களை துரத்தி சென்ற போதிலும், அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்,
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.