பிரதம நீதியரசர் தவிர மற்ற பதவிகளுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில், ஜனாதிபதிக்கு தடை உத்தரவு பிறப்பித்தது தொடர்பான அடிப்படை உரிமை மனுவை விரைந்து விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
குறித்த தடை உத்தரவை நீக்க அல்லது மாற்றியமைக்க உத்தரவிடுமாறு கோரி வண. தம்பர அமில தேரர் மற்றும் கலாநிதி மாஹிம் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்த 2 இடைக்கால மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதை அடுத்து, இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.