இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவியதில் இருந்து இதுவரையில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜனக வாக்கும்புற மற்றும் அசங்க நவரத்ன ஆகியோரும் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.





