அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தினால் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கும் இல்லாதொழிப்பதற்குமான பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் அதனை செவிமடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கடமையாற்றியிருப்பார்களாயின் கொரோன தொற்றுடன் நீண்ட காலம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





