முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்ற நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள நெலும் பொகுண திரையரங்கில் நேற்றையதினம் (28) நடைபெற்றது.
நூலின் முதற் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் நினைவுப் பரிசும் இதன்போது வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சரத் பொன்சேகாவின் சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, யுத்த சவாலில் வெற்றிபெற்று அரசியலில் பல சவால்களை எதிர்கொண்ட சரத் பொன்சேகா எதிர்காலத்தில் நாட்டுக்காக சிறந்த சேவையை ஆற்றக்கூடிய வல்லமை கொண்டவர் எனவும் தெரிவித்தார்.