வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கேபண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது சாரதி உரிமத்தை தற்காலிகமாக இரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.