கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என நினைத்து குடித்த இரண்டு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த 06 மீனவர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.