"தனக்கும் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை" தன்னை ஒரு கறைபடியாதவராக காட்டுவதற்கு நாமல் ராஜபக்ஸ முயற்சிகளை முன்னெடுகின்றார்- சாணக்கியன் தெரிவிப்பு!

தனக்கும் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை,தனக்கும் மொட்டுக்கட்சிக்கும் தொடர்பு இல்லையென தன்னை ஒரு கறைபடியாதவராக காட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ முயற்சிகளை முன்னெடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வுத்துறையுடன் செயற்பட்டவர்கள் அவர்கள் செய்த பிழையான செயற்பாடுகளை சொல்வதற்கு தயாராகவுள்ளதாக கூறியுள்ள நிலையிலும் இதுவரையில் அது தொடர்பில் விசாரணைசெய்யப்படவில்லை.

பிள்ளையானிடம் ஜேவிபியினர் ஆயுதம் கேட்கின்றார்கள் என்றால் சமையலறையில் வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தவரிடம் கத்தி எதனையும் கேட்டார்களோ தெரியாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *