கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் இன்று நண்பகல் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது வீடு தீ பிடித்துள்ளது.
மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வழியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த பெண் ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கிக் கொண்டார்.
இதன்பின் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரித்துள்ளது .
இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது இடமின்றி அயலவர் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், இருப்பதற்கோர் இடமின்றி தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வசித்து வந்ததாகவும் தற்பொழுது அதுவும் தீயில் எரிந்து இல்லாமல் போய் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.