சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே தேவை உள்நாட்டு நீதிப் பொறி முறையில் எமக்கு நம்பிக்கையில்லை என கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்க தலைவி நாகேந்திரன் ஆசா தெரிவித்தார்.
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று (30)திருகோணமலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்களுக்கான நீதி நியாயம் தேவை சர்வதேச நீதி முறை ஊடாக அமைக்கப்பட்ட அலுவலகம் என்றால் ஏற்றுக் கொள்வோம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அலுவலகம் தற்போதைக்கு தேவையில்லை இது எதற்காக எங்களுடைய உறவுகளின் மனவேதனை நீடிக்கிறதே தவிர குறையவில்லை.
தங்களுடைய உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் இதற்காக அனைவரும் இந்த நாளில் முடக்கப்பட்ட நிலையில் நீதியை கோருகிறோம் .வடகிழக்கில் அமைக்கப்படவிருக்கும் இந்த காணாமல் போனோர் omp அலுவலகத்தை எதிர்க்கிறோம் எதிர்த்தே போராடுகின்றோம் இவ்வாறான அலுவலகம் தேவையில்லை வெறும் கண்துடைப்பிற்காக எம்மை ஏமாற்ற நினைக்க வேண்டாம் சரியான தீர்வினை சர்வதேச நீதி மூலம் நிலை நாட்டுங்கள் இதற்காக அரசாங்கம் முன்வரவேண்டும்
தொடர்ச்சியான மனவேதனை அவலங்களை சந்தித்து வருகிறோம் . ஐக்கிய நாட்டு பேச்சுவார்த்தையும் வெற்றிகொள்ளவில்லை .
எங்களுடைய உறவுகளை நிம்மதியற்ற நிலையில் இந்த கொரோனா சூழ் நிலையில் அடக்கப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் கேட்கிறோம் சர்வதேச நீதி பொறி முறை ஊடாக நீதியை நியாயத்தை பெற்றுத்தாருங்கள் என்றார்.





