பிணை மனு நிராகரிப்பு; ரிஷாட் மனைவி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வரையும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *