
திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள், அவர்கள் தலையை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது அம்மாணவிகளின் மத சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.